“ஒளி வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே” என்பார் திருமாளிகைத்தேவர். காணும் பொருள்கள் யாவும் நமக்குக் காட்சிமைப் படவேண்டுமானால் நம் கண்களில் அவன் ஓளியாக இருக்க வேண்டும். காணுகின்ற பொருள்கள் யாவும் நமக்குத் தெளிவுபட வேண்டுமானால் அவனே நமக்கு உலப்பிலா விளக்காகவும் இருக்கவேண்டும். அப்படி நமக்கு கண்ணுக்கு கண்ணாக இருக்கின்ற இறைவனின் திருவோலக்கக் காட்சிகளை, அவனுடைய திருவிழாக் காட்சிகளை அவனளித்த கண்களாலே நாம் காண வேண்டாமா? அவனுடைய பேரெழிலை நம் வாகீசர் பெருமான் அனுபவித்து ரசித்த அவனுடைய குனித்த புருவத்தையும், கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பையும், பனித்த சடையையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீற்றையும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்தையும் நாம் காண வேண்டாமா? எடுத்த பிறவியில் வேறெதனை நாம் காணப்போகிறோம். இவ் வளாகத்தில் அவ்வொளியை (PHOTOS) காண்போம் வாரீர் !!